கடலூர் மாநகர அனைத்து கட்சிகள் குடியிருப்போர் அமைப்புகள் பொதுநல அமைப்புகளின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மனு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 14 July 2022

கடலூர் மாநகர அனைத்து கட்சிகள் குடியிருப்போர் அமைப்புகள் பொதுநல அமைப்புகளின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மனு


கடலூர் மாநகர அனைத்து கட்சிகள் குடியிருப்போர் அமைப்புகள் பொதுநல அமைப்புகளின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மனு 



கடலூர் பேருந்து நிலையத்தை குறிஞ்சிப்பாடி தொகுதி எம்.புதூரில் மாற்ற கடலூர் மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியதை கண்டித்து அதை திரும்ப பெற வலியுறுத்தி கடலூர் பேருந்து நிலையத்தை நவீனப்படுத்தவும் விரிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தி வரும் ஜூலை 18ஆம் தேதி காலை 10 மணிக்கு கடலூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் இது சம்ந்தமாக இன்று மாலை 5 மணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கோ. மாதவன் தலைமையில்  நகர செயலாளர் அமர்நாத் இந்திய தேசிய காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் வழக்கறிஞர் சந்திரசேகரன் மாவட்ட துணை செயலாளர் ரமேஷ்  விடுதலை சிறுத்தைகள் கட்சி அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் திருமார்பன், நகர செயலாளர் செந்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் குளோப் மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளர் ரஹீம் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர செயலாளர் ராதாகிருஷ்ணன் குடியிருப்போர் சங்க பொதுச் செயலாளர் மருதவாணன் தேவநாதன்பொது நல அமைப்பின்  தலைவர் ரவி மீனவர் விடுதலை வேங்கை வெங்கடேசன் மீனவர் பேரவை சுப்புராயன் எழுத்தாளர் சங்க மாவட்ட செயலாளர் பால்கி மக்கள் அதிகாரம் பாலு ரவி மனிதநேய ஜனநாயக கட்சி மன்சூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது


அனைத்து தரப்பு மக்களின் கருத்துக்களை கேட்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார்



முற்றுகைப் போராட்டத்தை விளக்கி லாரன்ஸ் ரோட்டில் கடை கடையாக துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

*/