மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர 21 வது வார்டு கூட்டம்தோழர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் கோ மாதவன் மாநகர் செயலாளர் அமர்நாத் மாவட்ட குழு உறுப்பினர் பக்கீரான் மாநகர் குழு உறுப்பினர் ஆனந்த் உறுப்பினர்கள் மணிகண்டன் சரவணன் பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் கூட்டத்தில்கீழ்காணும் முடிவுகள் எடுக்கப்பட்டது.
கடலூர் மாநகரம் 21 வது வார்டு மாநகர் மன்ற உறுப்பினர் அலமேலு அவர்களின் மகன் மணிமாறன் அதிகார துஷ்பிரயோகம் செய்து மாநகராட்சியின் அனுமதியின்றி 21 வது வார்டு உட்பட்ட மாட்டுப்பட்டி தெருவில் ஜேசிபி எந்திரத்தின் மூலம் பொதுமக்களின் கடைகளை மரங்களை அடியோடு அகற்றி உள்ளார்.
நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரின் இடங்களை மரங்களை வீட்டின் கதவுகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றி உள்ளார். மாநகராட்சி அலுவலகத்திற்கு தெரியாமல் மாநகராட்சியின் அனுமதி இல்லாமலும் மாநகராட்சியில் முறையாக வரி செலுத்தி வந்த கட்டிடத்தை அவர்களுக்கு எந்தவித தகவலும் சொல்லாமல் இடித்து தரைமட்டமாக்கி உள்ளார்.
இப்படிப்பட்ட ரவுடித்தனத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது
.மேலும் அவருக்கு உறுதுணையாக இருந்த ஜேசிபி இயந்திரத்தை ஜப்தி செய்து ஓட்டுநரை கைது செய்ய வேண்டும் எனவும் அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21 வது வார்டு செயலாளர் ஆர.எம் .ரமேஷ் தலைமையில் 18/7/2022 அன்று மாலை புதுப்பாளையம் கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது


No comments:
Post a Comment