கொரோனா தடுப்பூசி சிறப்பு மெகா முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம் பார்வையிட்டு ஆய்வு
கடலுார் மாட்டம், சின்ன தைக்கால் அங்கன்வாடி மையத்திலும் மற்றும் குடிகாடு ஊராட்சி குழந்தைகள் மைய கட்டிடத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
(10.07.2022 ) கடலூர் மாவட்டத்தில் சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் பல்வேறு பகுதிகளில் 3,753 முகாம்கள் அமைக்கப்பட்டு காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை நடைபெறுகிறது. இம்முகாம்கள் வாயிலாக 70,000 தடுப்பூசிகள் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின்போது துணை இயக்குநர் (சுகாதாரம்) மீரா ,ஊராட்சி மன்ற தலைவர்கள் ராஜா (பச்சையாங்குப்பம்),சிவக்குமார் (குடிகாடு)மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.


No comments:
Post a Comment