நான் B. முட்லூரில் தில்லை டைல்ஸ் & சானிட்டரி கடை வைத்து நடத்தி வருவதாகவும் எனது கடைக்கு அதிகப்படியான டைல்ஸ் தேவைப்பட்டதால் நானும் எனது மானேஜர் மீனாபாண்டியும் ஆன்லைன் மூலம் கூகிளில் தேடினோம் அப்போது முன்பின் தெரியாத கர்நாடகா மாநிலம் பெங்களூரு பணசங்கரி பகுதியை சேர்ந்த சுதர்சனராஜூ த/பெ வெங்மராஜூ என்பவரிடம் டைல்ஸ் ஆர்டர் செய்து ரூ.5,00,000 டெபாசிட் செய்ததாகவும் பணத்தைப் பெற்றுக்கொண்டு டைல்ஸை ஒப்படிக்காமல் மோசடி செய்து விட்டதாகவும் புகார் அளித்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் உத்தரவின் பேரில் ஆய்வாளர்கள் உதயகுமார், தேவேந்திரன் ஆகியோர் தலைமையில் உதவி ஆய்வாளர் அய்யப்பராஜூ தலைமைகாவலர்கள் மௌலீஸ்வரன், ஸ்டாலின், பாலமுருகன், காவலர் பாக்கியராஜ், ஓட்டுனர் பிரபு அடங்கிய காவல்துறையினர் வெளிமாநில கடவு சீட்டுப்பெற்று வாகனம் மூலம் பெங்களூரூ சென்று சுதர்சனராஜூவை அழைத்து வந்து கடலூர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்ததில் மோசடி செய்ததை ஒப்புக்கொண்டதை அடுத்து சுதர்சனராஜூவை கைது செய்து அவரிடம் இருந்த 3செல்போன்கள்,3சிம்கார்டுகள்,ஏ.டி.எம் கார்டு,ஆதார் கார்டு மற்றும் போலி கம்பெனி ஆவனங்களை கைப்பற்றி நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

No comments:
Post a Comment