விருத்தாசலம் அடுத்த சு.கீணனூர் கிராமத்தில் அருள்மிகு வீரனார் கோவில் குடமுழுக்கு திருவிழா. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 6 July 2022

விருத்தாசலம் அடுத்த சு.கீணனூர் கிராமத்தில் அருள்மிகு வீரனார் கோவில் குடமுழுக்கு திருவிழா.

விருத்தாசலம் அடுத்த சு.கீணனூர் கிராமத்தில் அருள்மிகு வீரனார் கோவில் குடமுழுக்கு திருவிழா.


கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த  சு.கீணனூர் கிராமத்தில் மணிமுத்தாற்றங்கரையில் அமைந்துள்ள அருள்மிகு வீரனார் திருக்கோயில் குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்றது. 


முன்னதாக, கோயில் முன்பு அமைக்கப்பட்ட யாகசாலையில் இரண்டாம் கால வேள்வி பூசை நிறைவுற்று மேளதாளத்துடன், அருள்மிகு வீரனார் மற்றும் திருக்கோயில் முன்புள்ள நுழைவாயில் மேல்  கலசத்தில் புனித நீர் ஊற்றி தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இக்கடமுழுக்கு விழாவில் அக்கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கண்டுகளித்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாட்டினை கோயில் அறங்காவலர் குழு,பொது மக்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிபிரியா என்னரசு  ஏற்பாடு செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

*/