காட்டுமன்னார்கோயில் வீராணம் ஏரி நிரம்பியது விவசாயிகள் மகிழ்ச்சி - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 29 July 2022

காட்டுமன்னார்கோயில் வீராணம் ஏரி நிரம்பியது விவசாயிகள் மகிழ்ச்சி

காட்டுமன்னார்கோயில் வீராணம் ஏரி நிரம்பியது விவசாயிகள் மகிழ்ச்சி


கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே லால்பேட்டையில் வீராணம்  ஏரி அமைந்துள்ளது இந்த ஏரியின் நீர்மட்டம் 47.50  அடியாகும் இந்த ஏரி மூலம் 44/556 ஏக்கர் நிலம் பாசன வசதி பெருகிறது அதோடு சென்னை மாநகரின் குடிநீருக்காக முக்கிய ஆதாரமாகவும் உள்ளது 


இந்த ஏரிக்கு பருவ காலங்களில் பெய்யும் மழை மேட்டூர் அணை மூலம் தண்ணீர் வரத்து இருக்கும் இந்த ஆண்டு மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டது அதன்படி வீராணம் ஏரிக்கு மேட்டூர் அணை தண்ணீர் கடந்த மாதம் வந்து சேர்ந்தது இதனால் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது

கடந்த வாரம் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது இதனால் அணையில் இருந்து 1்10 லட்சம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது வீராணம் ஏரிக்கு கொள்ளிடத்தில் இருந்து கீழணைக்கு தண்ணீர் திறந்து விடப்படும் அங்கு இருந்து வடவார் வழியாக வீராணம்  ஏரிக்கு  தண்ணீர் வந்து சேரும்

தற்போது கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் அதிக அளவில் திறந்து விடப்பட்டது இதனால் ஏரியில் நீர்மட்டம் முழு கொள்ளளவான 47.50 எட்டியது சென்னை மாநகருக்கு   63 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது


வீராணம் ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்


நீர் திறப்பது எப்போது இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில் தற்போது  முழு கொள்ளளவு எட்டியுள்ளது ஏரியிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் ஆலோசனை நடத்தப்படும் அதன் பின்னர் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் என தெரிவித்தனர்


செய்தியாளர் கே.பாலமுருகன் 

No comments:

Post a Comment

*/