கடலூர் காவல் கண்காளிப்பாளர் சக்திகணேசன் மற்றும் மாவட்டக்காவல் துறையினரைப் பாராட்டும் பொது மக்கள்
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. சக்திகணேசன் பெண்களின் நலன் காக்க Ladies First 82200 06082, முதியோர்களின் நலன் காக்க Hello Senior 82200 09557 என்ற புதிய காவல் உதவி எண்கள் அறிமுகபடுத்தப்பட்டு புகார்களுக்கு உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வளர்மதி வயது 30 என்பவர் தனது கணவர் தினமும் குடித்துவிட்டு வந்து தன்னையும் தனது குழந்தையையும் அசிங்கமாக பேசி அடித்து பிரச்சனை செய்வதாக Ladies Firrst காவல் உதவி எண்ணை தொடர்பு கொண்டு அளித்த புகாரின்பேரில் உடனடியாக நெல்லிக்குப்பம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதின்பேரில் சிறப்பு உதவி ஆய்வாளர் பாபு அவர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு மனுதாரரை கடுமையாக எச்சரித்து இனிமேல் இதுபோன்று நடந்துகொண்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது.
சிறுபாக்கம் ஒரங்கூர் கிராமத்தைச் சேர்ந்த கலியம்மா Qவயது 84 என்பவர் Hello Senior காவல் உதவி எண்ணில் தொடர்பு கொண்டு தனது மகள் அய்யம்மாள் தன்னை அசிங்கமாக திட்டுவதாகவும், அடித்து துன்புறுத்துவதாகவும் புகார் தெரிவித்ததன்பேரில் சிறுபாக்கம் காவல் நிலைய தலைமை காவலர் புகழேந்திரன் அவர்கள் சம்பவ இடம் சென்று விசாரித்ததில், அம்மாவிடம் இனிமேல் எந்த பிரச்சனையும் செய்யக்கூடாது என்று அய்யம்மாளை கண்டித்து தக்க அறிவுரைகள் வழங்கினார், அவரும் அதை ஏற்றுக்கொண்டு இனிமேல் எந்த ஒரு பிரச்சனையும் செய்ய மாட்டேன் என்று கூறியதால் இருவருக்கும் சமாதானம் செய்து வைக்கப்பட்டது இதுபோன்று பல்வேறு புகார்களுக்கு உடனடி தீர்வு கிடைப்பதால் கடலூர் மாவட்ட காவல்துறையினரை பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
No comments:
Post a Comment