கடலூர் பாதிரிக்குப்பம் கூட்டுறவு நகர், ராஜீவ்காந்தி நகர், ஜி.எம்.நகர் ஆகிய பகுதியில் கடலூர் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.11.30 லட்சம் செலவில் புதிதாக சிமெண்டு சாலை அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கூட்டுறவு நகர் குடியிருப்போர் நல சங்கத் தலைவர் அழகர் தேவநேசன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ஜல்லி சரவணன், சங்க பொது செயலாளர் அப்பாதுரை, முதன்மை செயலாளர் சிவசங்கரி, துணை தலைவர் முத்துக்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக அய்யப்பன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சிமெண்டு சாலையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து ராஜீவ்காந்தி நகரில் 14.08 லட்சத்தில் ரேஷன்கடை அமைக்க அடிக்கல் நாட்டினார். இதில் கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், ஊராட்சி செயலாளர் வேல்முருகன், ஜீம் சரவணன், சமூக ஆர்வலர் சக்திவேல், வார்டு உறுப்பினர் அமுதா விஸ்வநாதன், சித்ராலயா ரவி, எம்.என்.டி. ஸ்ரீமதிராஜேந்திரன், ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்ததுரை, ஊராட்சி மன்ற தலைவர்கள் ஞானபிரகாசம், மனோகர், அழகு, சன் பிரைட் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment