44 ஆவது செஸ் ஒலிம்பியாட் சிதம்பரம் ஷெம்போர்டு பள்ளி உலக சாதனை - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 28 July 2022

44 ஆவது செஸ் ஒலிம்பியாட் சிதம்பரம் ஷெம்போர்டு பள்ளி உலக சாதனை

44 ஆவது செஸ் ஒலிம்பியாட் சிதம்பரம் ஷெம்போர்டு பள்ளி உலக சாதனை


இன்று சென்னையில் துவங்க உள்ள 44 வது செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை முன்னிட்டு, சிதம்பரம் ஷெம்போர்டு பள்ளியில், சென்னையை சேர்ந்த வர்ச்சு புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் சர்வ மங்களா அகாடமி உடன் இணைந்து கை அச்சு மூலம் 44 வது செஸ் ஒலிம்பியாட் லோகோவை உருவாக்கும் சாதனை முயற்சி நிகழ்த்தப்பட்டது. 


பள்ளியின் செயலர் ஹரிகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சென்னை வர்ச்சு புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் சார்பாக டாக்டர் சுரேஷ்குமார் மற்றும் சந்தோஷ் ஆகியோர் கலந்து கொண்டு ஆய்வு செய்தனர். மாணவர்கள் ஆசிரியர்கள், பணியாளர்கள் என 600கும் மேற்பட்டோர் பங்கு பெற்று 4654 கை அச்சு மூலம் 4 மணி நேரம் 30 நிமிடங்களில், செஸ் ஒலிம்பியாட் லோகோவை உருவாக்கி உலக சாதனை நிகழ்த்தினர். இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை சர்வ மங்களா அகாடமியை சேர்ந்த பாலாஜி மற்றும் சுகந்தி ஆகியோர் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுடன் இணைந்து செய்திருந்தனர்.

பள்ளியின் சார்பாக இந்த உலக சாதனை நிகழ்த்தப்பட்டதற்கு முதல்வர் லதா அவர்களிடம் சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவின் முடிவில், பள்ளி கண்காணிப்பாளர் பாரிவள்ளல் அனைவருக்கும் நன்றி கூறினார்.


No comments:

Post a Comment