தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 24 வது மாவட்ட மாநாடு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 28 July 2022

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 24 வது மாவட்ட மாநாடு.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 24 வது மாவட்ட மாநாடு.

குறிஞ்சிப்பாடி தனியார் திருமண மண்டபத்தில் துவங்கியது .மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார் மாநாட்டின் கொடியினை மாவட்ட துணைத்தலைவர் மகாலிங்கம் ஏற்றிவைத்தார் .வரவேற்புக் குழு பொருளாளர் வெங்கடேசன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். வரவேற்பு குழு செயலாளர் சரவணன் வரவேற்புரையாற்றினார். சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் கே. பாலகிருஷ்ணன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் நடைபெற்ற வேலைகளின்  அறிக்கையை வாசித்தார்.மாநாட்டில் மாநிலத் துணைச் செயலாளர் கோ .மாதவன் மற்றும் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ் மாநாட்டை வாழ்த்தி பேசினர். 

வரவு செலவு அறிக்கையை மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி வாசித்தார் மாவட்ட மாநாட்டை நிறைவு செய்து  மாநிலத் தலைவர் சுப்பிரமணியம் பேசினார்.  மாநாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து  200க்கும் மேற்பட்ட மாவட்ட மாநாட்டின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர் . ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளை வலியுறுத்தி  விவசாயிகளின் கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.  விவசாயிகளுக்கான போராட்டங்களை திட்டமிடுவதற்காகவும் விவாதிப்பதற்காகவும் மாநாடு கூடியுள்ளது.முடிவில் வரவேற்புக் குழுத் தலைவர் மெய்யழகன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment