கடலூரில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு (+ 2 மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டி) நிகழ்ச்சியினை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் துவக்கி வைத்தார்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் புனித வளனார் மேல்நிலைப்பள்ளியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம் முன்னிலையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு +2 மாணவர்களுக்கான உயர்கல்வி வழிக்காட்டி நிகழ்ச்சியினை துவக்கிவைத்தார்.
தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் அவர்கள் தெரிவித்ததாவது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின கனவுத்திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் கிழ் கல்லூரி கனவு +2 மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி, மாணவர்களின் வாழ்வில் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு பின் படிக்கும் உயர்கல்வி அவர்களது வாழ்க்கையில் திருப்புமுனையினை ஏற்படுத்துகிறது.
தமிழக மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கு உள்ள வாய்ப்புகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், பல்வேறு நுழைவுத்தேர்வுகள் குறித்தும், வங்கி மற்றும் வங்கி கடன் பெறுதல் உள்ளிட்ட அறிவிப்பினை அனைவரும் பெறும் வகையில் நமது தமிழ்நாடு அரசு இத்திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. மாணவர்களுக்கான நுழைவுத்தேர்வுகள், வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பெறும் வகையில் நான் முதல்வன் என்ற இணையதளம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
நான் முதல்வன் இணைய முகப்பில் 2000-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களும் இந்நிறுவனங்கள் வாயிலாக பெறக்கூடிய 300-க்கும் மேற்பட்ட தொழில் சார்ந்த வழிகாட்டுதல்களும் இடம் பெற்றுள்ளன. நாடு முழுவதும் உள்ள 150 க்கும் மேற்பட்ட உயர் கல்விக்கான உதவித்தொகைகள் பற்றிய விவரங்களும் நான் முதல்வன் இணைய முகப்பில் இடம் பெற்றுள்ளன.
மாணவர்களுக்கு இத்தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே அனைவரும் இதனை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இன்று நடைபெற்ற நிகழ்வில் உங்களை ஆயத்தப்படுத்தலுக்கும், ஆர்வமூட்டுதலுக்கும் கற்றறிந்த வல்லுநர்கள் வருகை புரிந்துள்ளனர் பொறியியல், மருத்துவம், கலை மற்றும் அறிவியல், வணிகவியல், சட்டம், கால்நடை அறிவியல், மீன்வள நுட்பங்கள், அரசு வேலைவாய்ப்புகள், வங்கி கடன்,படிப்புதவித்தொகை பற்றி துறை சார்ந்த வல்லுநர்கள் விளக்க உள்ளனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் நான் முதல்வன் திட்டம் அறிவிக்கப்பட்டு தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் உலகத்தரம் வாய்ந்த கல்வியை பெறவேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதனை மாணவர்கள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.சக்திகணேசன், கடலூர் மாநகர மேயர் திருமதி.சுந்தரிராஜா , துணை மேயர் பா.தாமரைச்செல்வன் , மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment