NLC நிறுவனத்தை கண்டித்து கம்மாபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 4 June 2022

NLC நிறுவனத்தை கண்டித்து கம்மாபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கம்மாபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் என்எல்சி நெய்வேலி நிறுவனத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு, வேலைவாய்ப்பு, மாற்று இடத்திற்க்கான பட்டா உள்ளிட்டவைகளை உடனே வழங்க கோரியும், மூன்றாவது சுரங்கத்திற்கு விவசாயிகளின் ஒப்புதல் இன்றி நிலத்தை கையகப்படுத்துவதை நிறுத்தக் கோரியும், புதிதாக நிலம் கையகப்படுத்தும் போது இன்றைய சந்தை மதிப்பில் நான்கு மடங்கு வழங்கவேண்டும் என்றும்,  நிலம் கொடுத்தவர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்,  மாற்றுக்குடியமர்விற்கு 5 சென்ட் பட்டாவுடன் கூடிய மனை கொடுத்து அதில் வீடு கட்டி தரவேண்டும் நிலமெடுத்த பகுதியில் உள்ள விவசாய தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கண்டன கோஷம் எழுப்பினர். 

இதில் மாநிலக்குழு ரமேஷ்பாபு, மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்ட செயற்குழு ரவிச்சந்திரன், ஆறுமுகம், வட்ட செயலாளர் அசோகன் உள்ளிட்ட 500க்கும்மேற்பட்டோர்  கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில்  மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசியது.

நெய்வேலி முதலாவது மற்றும் இரண்டாவது சுரங்க விரிவாக்கப்பணிக்காக கம்மாபுரம் பகுதியில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும்,  கொடுக்கக்கூடிய நிவாரண தொகையை ஒரே தவனையாக வழங்காததால் அந்த பணம் பயனற்ற பணமாக போகிறது என்றும், நிலம் கொடுத்த உரிய பயனாளிகளுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும், நிலம் கொடுத்த விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் தற்போது நெய்வேலி நிலக்கரி நிறுவனம் 3வது சுரங்கம் அமைப்பதற்கு விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தியதில் ஏற்கனவே நிலம் கொடுத்த விவசாயிகள் நடுவீதியில் நிற்பதை போல நாங்களும் நிற்க விரும்பவில்லை என்றும் இனபிஹா பகுதியில் ஏறக்குறைய 27 கிராமங்களிலும் மூன்று போகம் விளையக்கூடிய எங்கள் நிலத்தை கொடுக்க மாட்டோம் என்று உறுதியாக கூறியுள்ளனர். 

தொடர்ந்து விவசாய நிலங்களை எடுத்து கொண்டு போனாள் தமிழக வரைபடத்தில் கடலூர் மாவட்ட இல்லாமல் போய்விடும் என்றும் இந்த மாவட்ட மக்கள் மற்ற மாவட்டங்களில் அகதிகளாக குடியேறும் சூழல் ஏற்படும் என்றும் கூறினார். பொய்யான வாக்குறுதிகளை சொல்லி விவசாயிகளிடமிருந்து நிலங்களை அபகரிக்க கூடாது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழக அரசை கேட்டுக்கொள்வதாகவும் செய்தியாளர்களிடம் கேட்டுக்கொண்டார் நிறுவனத்தை கண்டித்து கம்மாபுரத்தில் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கம்மாபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் என்எல்சி நெய்வேலி நிறுவனத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு, வேலைவாய்ப்பு, மாற்று இடத்திற்க்கான பட்டா உள்ளிட்டவைகளை உடனே வழங்க கோரியும், மூன்றாவது சுரங்கத்திற்கு விவசாயிகளின் ஒப்புதல் இன்றி நிலத்தை கையகப்படுத்துவதை நிறுத்தக் கோரியும், புதிதாக நிலம் கையகப்படுத்தும் போது இன்றைய சந்தை மதிப்பில் நான்கு மடங்கு வழங்கவேண்டும் என்றும்,  நிலம் கொடுத்தவர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்,  மாற்றுக்குடியமர்விற்கு 5 சென்ட் பட்டாவுடன் கூடிய மனை கொடுத்து அதில் வீடு கட்டி தரவேண்டும் நிலமெடுத்த பகுதியில் உள்ள விவசாய தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கண்டன கோஷம் எழுப்பினர். 

இதில் மாநிலக்குழு ரமேஷ்பாபு, மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்ட செயற்குழு ரவிச்சந்திரன், ஆறுமுகம், வட்ட செயலாளர் அசோகன் உள்ளிட்ட 500க்கும்மேற்பட்டோர்  கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில்  மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசியது.

நெய்வேலி முதலாவது மற்றும் இரண்டாவது சுரங்க விரிவாக்கப்பணிக்காக கம்மாபுரம் பகுதியில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும்,  கொடுக்கக்கூடிய நிவாரண தொகையை ஒரே தவனையாக வழங்காததால் அந்த பணம் பயனற்ற பணமாக போகிறது என்றும், நிலம் கொடுத்த உரிய பயனாளிகளுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும், நிலம் கொடுத்த விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் தற்போது நெய்வேலி நிலக்கரி நிறுவனம் 3வது சுரங்கம் அமைப்பதற்கு விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தியதில் ஏற்கனவே நிலம் கொடுத்த விவசாயிகள் நடுவீதியில் நிற்பதை போல நாங்களும் நிற்க விரும்பவில்லை என்றும் இனபிஹா பகுதியில் ஏறக்குறைய 27 கிராமங்களிலும் மூன்று போகம் விளையக்கூடிய எங்கள் நிலத்தை கொடுக்க மாட்டோம் என்று உறுதியாக கூறியுள்ளனர். 

தொடர்ந்து விவசாய நிலங்களை எடுத்து கொண்டு போனாள் தமிழக வரைபடத்தில் கடலூர் மாவட்ட இல்லாமல் போய்விடும் என்றும் இந்த மாவட்ட மக்கள் மற்ற மாவட்டங்களில் அகதிகளாக குடியேறும் சூழல் ஏற்படும் என்றும் கூறினார். பொய்யான வாக்குறுதிகளை சொல்லி விவசாயிகளிடமிருந்து நிலங்களை அபகரிக்க கூடாது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழக அரசை கேட்டுக்கொள்வதாகவும் செய்தியாளர்களிடம் கேட்டுக்கொண்டார்

No comments:

Post a Comment

*/