விருத்தாசலம் கருவேப்பிலங்குறிச்சி தெற்கு ஒன்றியம் சார்பாக கலைஞரின் 99 ஆவது பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 4 June 2022

விருத்தாசலம் கருவேப்பிலங்குறிச்சி தெற்கு ஒன்றியம் சார்பாக கலைஞரின் 99 ஆவது பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி


விருத்தாசலம் கருவேப்பிலங்குறிச்சி தெற்கு ஒன்றியம் சார்பாக கலைஞரின் 99 ஆவது பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி.


திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான மறைந்த கலைஞர் அவர்களின் 99 வது பிறந்த நாளையொட்டி கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியில் விருத்தாசலம் தெற்கு ஒன்றியம் சார்பாக ஒன்றிய செயலாளர் வேலுப்பிள்ளை தலைமையில் விருதாசலம் ஒன்றிய குழு பெருந்தலைவர் மலர் முருகன் முன்னிலையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கட்சி கொடியேற்றி, இனிப்பு வழங்கி கலைஞரின் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி , பொதுமக்களுக்கு அரிசி, புடவை, விவசாய இடுபொருட்கள் தெளிப்பான், மற்றும் மரக்கன்றுகள் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.


அதன் பின்பு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் சிறப்புரையாற்றி அவர் பேசுகையில்

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் பிறந்து தொண்ணூத்தி ஒன்பது ஆண்டுகள் ஆகிறது, ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தார்கள், பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி தந்து, நம்மை விட்டு விலகி, அண்ணா உடைய இதயத்தை இரவலாக பெற்று, வங்கக் கடலோரம் இன்று உறங்கிக் கொண்டிருக்கிறார்கள், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் இருக்கின்ற திசையை நோக்கி வணங்கி அவர் ஈன்றெடுத்த அன்பு பிள்ளை கழகத்தினுடைய செல்லப்பிள்ளை, தமிழ்நாட்டுடைய முதலமைச்சர், இந்தியாவிலேயே நம்பர் ஒன் முதலமைச்சர் என்கின்ற பெயரை பெற்றிருக்கக் கூடிய தளபதி மு க ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று ஓராண்டு கால ஒரு சிறப்பான ஆட்சி உழைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை எல்லோரும் நன்றாக அறிவீர்கள் என்று பேசினார். 


நிகழ்ச்சியில் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் பாலு, கிளை கழக செயலாளர் கோவிந்தசாமி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் நடராஜன், ஒன்றிய துணை செயலாளர் முத்துவேல் உட்பட கழகத் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவின் முடிவில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

*/