இன்று பெரியார் அரசு கலைக் கல்லூரியில் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் ஏற்படுத்திய மென் திறன் மையத்தின் சார்பில் 2021-2022-ம் கல்வியாண்டிற்கான மென்திறன் பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தலைமை ஏற்று பயிற்சினைத் தொடக்கி வைத்த கல்லூரி முதல்வர் முனைவர். சி. ஜோதி வெங்கடேசுவரன் அவர்கள் “மாணவர்கள் கல்வி அறிவுடன் மென்திறன்களையும் கற்றுக் கொண்டு தங்களின் பண்பினை வளர்த்துக் கொள்ள வேண்டும்” என வலியுறுத்தினார். மேலும், மாணவர்கள் வேலைவாய்ப்பினைப் பெறுவதற்கு மென்திறன்கள் மிகவும் பயன் தரும் என்றார்.
இந்நிகழ்வின் தொடக்கத்தில் ஆங்கிலத் துறைத்தலைவர் முனைவர் சா. டேவிட் சௌந்தர் அவர்கள் அனைவரையும் வரவேற்று மாணவர்கள் மென் கலைகளைக் கற்றுக்கொள்வதால் எதிர்காலத்தில் மாணவர்களுக்கு எத்துனை நன்மை பயக்கும் என எடுத்துரைத்தார். பொருளியியல் துறைத் தலைவர் பேராசிரியர் சாந்தி இராமகிருஷ்ணன் மற்றும் வேதியியல் துறைத் தலைவர் பேராசிரியர் வண்ணமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பெரியார் கலைக் கல்லூரி மென் திறன் மையத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ச. பாலு சுபேஷ் அவர்கள் தனது நோக்கவுரையில் வாழ்க்கையில் மென்கலைகளின் பங்கு கல்வியறிவிற்கு இணையாய் நின்று தனி மனிதனை பண்பாளாராக்குகிறது என்றும் இந்த கல்வியாண்டில் ஒவ்வொரு துறைகளிலிருந்தும் இளங்கலை மூன்றாமாண்டு மாணவர்களில் 20 பேரைத் தேர்வு செய்து மொத்தம் 500 மாணாக்கார்களுக்கு சிறு சிறு குழுக்களாகப் பிரித்து ஆங்கிலத்துறையின் மென்திறன் பயிற்சி பெற்ற பேராசிரியர்களை கொண்டும் மற்றும் சிறப்பு மென்திறன் பயிற்சியாளர்களை கொண்டும் இப்பயிற்சி திறம்பட நடத்தப்படுகிறது என்று விளக்கினார்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஆங்கிலத்துறை பேராசிரியர்களும் மாணவர்களும் சிறப்பாகச் செய்திருந்தனர். இவ்விழாவில் பல்வேறு துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணாக்கர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ச. பாலு சுபேஷ் அவர்கள் நன்றியுரையாற்றினார்.
No comments:
Post a Comment