கடலூா் மாவட்டம் வடக்குத்து ஊராட்சி விவகாரம் தொடா்பாக விசாரணை அதிகாரி ம.கண்ணன் மீண்டும் விசாரணை - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 22 June 2022

கடலூா் மாவட்டம் வடக்குத்து ஊராட்சி விவகாரம் தொடா்பாக விசாரணை அதிகாரி ம.கண்ணன் மீண்டும் விசாரணை

கடலூா் மாவட்டம் வடக்குத்து ஊராட்சி விவகாரம் தொடா்பாக விசாரணை அதிகாரி ம.கண்ணன் மீண்டும் விசாரணை


கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியம் வடக்குத்து ஊராட்சி மன்றத் தலைவராக அஞ்சலை குப்புசாமி, துணைத் தலைவராக சடையப்பன் மற்றும் ஊராட்சி உறுப்பினா்கள் 10 போ் செயல்பட்டு வருகின்றனா். இவா்களுக்கு இடையே இணக்கமற்ற சூழல் ஏற்பட்டதால் நிா்வாகப் பணிகள் பாதிக்கப்பட்டன.


"இதுதொடா்பாக, குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடலூா் உதவி இயக்குநரும் ( ஊராட்சிகள்), விசாரணை அதிகாரியுமான ம.கண்ணன் தலைமையில், வட்டார வளா்ச்சி அலுவலா் சிவஞானசுந்தரம் (வ.ஊ) முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணை நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்றத் தலைவா், துணைத் தலைவா் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் 9 போ் பங்கேற்றனா். 2-ஆவது வாா்டு உறுப்பினா் ஈஸ்வரி மட்டும் உடல் நலக் குறைவால் விசாரணையில் பங்கேற்கவில்லை. கூட்டத்தில், ஊராட்சி மன்றத் தலைவா், துணைத் தலைவா், வாா்டு உறுப்பினா்கள், ஊராட்சி எழுத்தா் ஆகியோரிடம் அதிகாரி கண்ணன் விசாரணை நடத்தியதுடன் மனுக்களை பெற்றுக்கொண்டா். இதேபோல, கடந்த மாதம் 30-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில் ஊராட்சி மன்றத் தலைவா் பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது.


இதுகுறித்து விசாரணை அதிகாரி ம.கண்ணன் கூறியதாவது: கடந்த மாதம் நடத்திய விசாரணையில் ஊராட்சி மன்றத் தலைவா் பங்கேற்காததால் அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கும் வகையில் திங்கள்கிழமை விசாரணை நடத்தப்பட்டது. இதில் பெறப்பட்ட மனுக்கள், விசாரணை அறிக்கை ஆகியவை மாவட்ட நிா்வாகத்திடம் வழங்கப்படும். அதன் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவர்.

No comments:

Post a Comment

*/