அக்னிபாத் திட்டத்தை கைவிடக்கோரி கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பாலக்கரை சந்திப்பில்... இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்.. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், ஜனநாயக மாணவர் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் , மாதர் சங்கம்,சிஐடியு உள்ளிட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை கைவிடக் கோரியும், நான்கு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து பென்ஷன் தர மறுப்பதை கண்டித்தும், வேலைவாய்ப்பு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்ய கோரி 40க்கும் மேற்பட்டோர் மத்திய அரசை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

No comments:
Post a Comment