புவனகிரி அருகே கிராம நிர்வாக அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது !!"
கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம் மருதூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு புவனகிரி வருவாய் ஆய்வாளர் கவிதா அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் குருமூர்த்தி தலைமையில் 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் அலுவலக வளாகத்தில் நட்டனர்.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தனலஷ்மி ராமலிங்கம் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் அன்னக்கிளி இளந்திரையன் முன்னாள் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் சக்திவேல் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மனோகரன் கிராம நிர்வாக உதவியாளர்கள் பானுமதி சரவணன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment