கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம் மருதூர் ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஊராட்சியில் அனைத்து வார்டு பகுதிகளிலும் குளக்கரைகளில் உள்ள கரையோரங்களிலும் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி வளாகங்களிலும்முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற அரசு கொறடா உயர்நிலைக் குழு உறுப்பினரும் ஆதிதிராவிடர் அணி இணைச் செயலாளருமான மருதூர் ஏ.இராமலிங்கம் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி ராமலிங்கம் அவர்களின் தலமையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைப்பெற்றது .
ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அன்னக்கிளி இளந்திரையன்ஊராட்சி செயலாளர் சி.பழனி இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மேலும் இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் தேன்மொழி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஜீ.மனோகரன் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அ.சக்திவேல் ஊராட்சி மன்ற உறுப்பினர் சி.விமல் பிரபாகரன் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குனர் ச.வேல்முருகன்தூய்மைப் பணியாளர் லெ.சித்ரா தூய்மை காவலர்கள் ரா.சாமுண்டீஸ்வரி கி.பராசக்தி பணித்தள பொறுப்பாளர்கள் சி.சுதா. ப.ராதா மற்றும் கிராம பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர் நிகழ்ச்சியை அடுத்து ஊராட்சி செயலர் பழனி இளங்கோவன் நமது ஊராட்சி தூய்மையான ஊராட்சி என்று தொடங்கி சுற்றுச்சூழலை பாதுகாப்போம் குப்பைகளை தரம் பிரிப்போம் குப்பைகள் உருவாவதைக் குறைப்போம் பாலித்தீன் பயன்பாட்டை குறைப்போம் இயற்கை வளம் மீட்போம் பாதுகாப்பான சுற்றுச் சூழலை உருவாக்குவோம் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கருத்துக்களை புரியும்படி எடுத்துரைத்து விளக்கினார் கருத்துக்களை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் நமது பூமி நமது ஊராட்சியை தூய்மையான ஊராட்சியாக பாதுகாப்பான சுற்றுச் சூழலை உருவாக்குவோம் என்று சபதம் ஏற்றனர்
No comments:
Post a Comment