விருத்தாசலம் ஆயியார் மடம் தெருவில் கடந்த 15 நாட்களாக நடைபெற்ற இலவச சதுரங்க பயிற்சி முகாம் நிறைவு விழா மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 5 June 2022

விருத்தாசலம் ஆயியார் மடம் தெருவில் கடந்த 15 நாட்களாக நடைபெற்ற இலவச சதுரங்க பயிற்சி முகாம் நிறைவு விழா மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா.


விருத்தாசலம் ஆயியார் மடம் தெருவில் கடந்த 15 நாட்களாக நடைபெற்ற இலவச சதுரங்க பயிற்சி முகாம் நிறைவு விழா மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா.


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆயிர்மடத்தெருவில் கடந்த 15 நாட்களாக சிறுவர்களுக்காக இலவச சதுரங்க பயிற்சி நடத்தப்பட்டு வந்தது இந்நிலையில் இன்று பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழாவில் சதுரங்க பயிற்சியாளர் கண்ணன் வரவேற்புரையாற்றினார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் அவர்களின் மகனும், வெங்கடேஸ்வரா கல்வி குழுமத்தின் தாளாளர் வெங்கடேசன், விருத்தாசலம் நகர மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ், மற்றும் நகரமன்றத் துணைத்தலைவர் ராணி தண்டபாணி சான்றிதழ் வழங்கினார்கள். 


மூத்த வழக்கறிஞர் சந்திரசேகரன், திராவிடர் கழக மாவட்ட தலைவர் இளங்கோவன், 14 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஷகீலா பானு, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் அன்பழகன் மற்றும் செயின்ட் மேரிஸ் நர்சரி பள்ளி தாளாளர் ராவணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை 13 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் கருணாநிதி மற்றும் ஆயியார் மடம் நண்பர்கள் ஏற்பாடு செய்தார்கள். விழாவின் முடிவில் அன்பு நன்றியுரையாற்றினார் . விழாவை பட்டிமன்ற பேச்சாளரும் வழக்கறிஞருமான அருண் தொகுத்து வழங்கினார்.

No comments:

Post a Comment

*/