கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம் மருதூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற320 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ. செல்லியம்மன்ஆலய தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.தேர் திருவிழாவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆன்மீக பக்தர்கள் கலந்து கொண்டு திருவிழாவை கண்டுகளித்து அம்மனை வழிபட்டு சென்றனர்.
இத் திருவிழாவானது ஆண்டுதோறும் காப்பு கட்டி தொட்டில் பிள்ளை குதிரை எடுத்தல் கேடியம் எடுத்தல் போன்ற நிகழ்வுகள் ஆறு நாட்கள் தொடர்ந்து திருவிழாவானது நடைபெறும், அதனைத் தொடர்ந்து நேற்று 08. 06. 2022 புதன்கிழமை காலை 7.00 மணியளவில் கிணற்றில் இறங்கி சாமி எடுத்தல் நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து அம்மன்னை அலங்கரிக்கப்பட்டு சிங்க வாகனத்தில் இரவு முழுவதும் வீதி உலா சென்று இன்று 09.06. 2022 வியாழக்கிழமை பழமைவாய்ந்த தேரில் அருள்மிகு ஸ்ரீ. செல்லியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்து காட்சியளித்தார்.
நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரம் மற்றும் வெளியூரில் இருந்து 5. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து அம்மனை வழிப்பட்டனர்.மீண்டும் மாலை 6.00 மணி அளவில் அருள்மிகு செல்லியம்மன்னை தாலாட்டு பாட்டுடன் ஆடல் பாடலுடன் செண்டை மேளம் முழங்க அம்மனை கிணற்றில் வைத்து பக்தர்கள் வழிபட்டனர்.
இத்திருவிழாவின் முக்கிய அம்சமான 40. அடி ஆழமுள்ள நீர் நிறைந்த கிணற்றில் சாமி எடுக்கும் நிகழ்வும் சாமியை கருவறையில் வைத்து வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ள மக்கள் மத்தியில் மாறாக மருதூரில் பல நூற்றாண்டு காலமாக நீர் நிறைந்த கிணற்றில் அம்மனை வைத்து ஆண்டுக்கு ஒருமுறைமட்டும் அம்மனை நீர் நிறைந்த கிணற்றிலிருந்து வெளியில் எடுத்து வந்து அலங்கரிக்கப்பட்டு ஒரு இரவு இரண்டு பகல் முப்பத்தி ஆறு மணி நேரம் மட்டும் பக்தர்கள் மத்தியில் காட்சியளித்து மீண்டும் நீர் நிறைந்த கிணற்றில் அம்மனை வைத்து கிணற்றை தெய்வமாக கிராமத்தில் உள்ள பொது மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment