கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டம் நாட்டார்மங்கலம் அருகில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது நாட்டார்மங்கலம் கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் தலையில் ரத்த காயங்களுடன் கிடந்தார் இதுபற்றி காட்டுமன்னார்கோயில் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த சேத்தியாதோப்பு காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரம் மற்றும் காட்டுமன்னார்கோயில் காவல் ஆய்வாளர் ஏழுமலை சம்பவ இடத்திற்கு வந்து உடலை பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் பின்பு விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது இதுகுறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.
மேலும் இது சம்பந்தமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு பிரகாஷ் தெரிவிக்கையில் கடந்த 10 ஆண்டுகளாக இந்த கடை இருப்பதால் அருகில் பள்ளி கல்லூரிகள் இயங்கி வருகிறது இதற்கு மாணவ மாணவிகள் வருகிறபோது நிறைய பிரச்சனைகள் ஏற்படுகிறது இங்கு இதற்கு முன்பு அடிக்கடி விபத்து ஏற்பட்டு இதுவரை 5க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் மேலும் சாலையின் வளைவில் இருப்பதால் குடி பிரியர்கள் குடித்துவிட்டு வண்டிகளில் திரும்பும்போது அடிக்கடி விபத்து ஏற்பட்டு பல பேர் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
தொடர்ந்து கடையை அப்புறப்படுத்த இந்திய ஜனநாயக மாதர் சங்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாட்டார்மங்கலம் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் கடந்த 10 ஆண்டுகளாக போராட்டம் செய்து வருகிறார்கள் ஆனால் இதுவரை அதற்கான முடிவு இல்லை மேலும் நேற்று 8.6.2022 அன்று நாட்டார்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தர்மா என்கிற வாலிபர் மர்மமான முறையில் தலையில் ரத்த காயங்களுடன் இறந்து கிடக்கிறார் டாஸ்மார்க் அருகில் வாலிபர் ஒருவர் எப்படி இறந்தார் தலையில் ரத்த காயம் உள்ளது இது சம்பந்தமாக முறையாக நீதி விசாரணை நடத்த வேண்டும் மேலும் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்
அவர்களுடன் நாட்டார் மங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் சுதா மணிரத்தினம் வட்டக் குழு உறுப்பினர்கள் பொன்னம்பலம் புகழேந்தி ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயக்குமார் உள்ளிட் ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்
செய்தியாளர்: கே.பாலமுருகன்


No comments:
Post a Comment