கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே உள்ள கீரப்பாளையத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர் பேயத்தேவன் தலைமை தாங்கினார் . ஒன்றிய தலைவர் கவிக்குயில் வரவேற்றார். ஒன்றிய துணைத் தலைவர்கள் மலர்செல்வி, மீனாட்சி ஒன்றிய பொருளாளர் பழனியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
இந்த ஆர்ப்பாட்டத்தில் காலமுறை ஊதியம், நிரந்தர பணி, பழைய ஓய்வூதிய திட்டம், காலி பணியிடங்களை நிரப்புதல் போன்ற பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றி தரவேண்டும் என வலியுறுத்தி மாவட்ட செயலாளர் சின்னசாமி ,முன்னாள் மாவட்டச் மச்சேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் பலர் திரளானோர் கலந்து கொண்டனர் முடிவில் மாவட்ட துணைத் தலைவர் ரவிக்குமார் நன்றி கூறினார் .

No comments:
Post a Comment