தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு இந்திராநகர், வடக்குத்து வர்த்தக நலச்சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா நெய்வேலி வடக்குத்து எஸ்.பி.டி மஹாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். செயலாளர் சேகர் வரவேற்றார். சக்திவேல் முன்னிலை வகித்தார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு இந்திரா நகர், வடக்குத்து வர்த்தக நல சங்கத்தின் சாதனை மலரை வெளியீட்டு, அரசு பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வர்த்தக சங்க பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு, மாநில பொருளாளர் சதக்கத்துல்லா, மண்டல தலைவர் சண்முகம், மாவட்ட செயலாளர் வீரப்பன், ஜெயப்பிரியா நிர்வாக இயக்குநர் ஜெய்சங்கர், ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி ஸ்டோர் உரிமையாளர் குணசேகரன், யமஹா ஷோரும் உரிமையாளர் ஜெகன், தொழில் அதிபர் இளஞ்செழியன், வர்த்தக சங்க மாவட்ட பொருளாளர் ராஜமாரியப்பன், இந்திரா நகர், வடக்குத்து வர்த்தக நலச்சங்கம் நிர்வாகிகள் ராஜகோபால், கணேசன், முருகேசன், குமரேசன், மாதவன், பாலமுருகன்,கோபு, ராஜ்மோகன், மனோகரன், செல்வம் மற்றும் வர்த்தக சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் செல்வ முத்துக்குமரன் நன்றியுரை வழங்கினார்.

No comments:
Post a Comment