கடலூர் மாவட்டம், வடலூர் to கடலூர் நெடுஞ்சாலையின் ஐய்யன் ஏரி அமைந்துள்ளது இங்கு மத்திய அரசு நிறுவனமான நெய்வேலி என்.எல்.சி இந்தியா நிறுனத்தின் சுரங்கம் 1A விலிருந்து பாசனத்திற்காக நீர் வெளியேற்றப்படுவது வழக்கம் சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரானது ஐயன் ஏரியை வந்தடைந்து பின்னர் வடலூர் சேராக் குப்பம் பகுதி விளை நிலங்களுக்கு வாய்க்கால்கள் வழியாக பாசனத்திற்கு அனுப்பப்படுகிறது எப்பொழுதும் நீர்வரத்து அதிக அளவில் காணப்படும் ஐய்யன் ஏரி தற்பொழுது நீர்வரத்து இல்லாததால் வறட்சியாக காணப்படுகிறது மேலும் வடலூர் பேருந்து நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரானது ஏரியில் கலப்பதால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது
மீன் வியாபாரிகள் அய்யனேரி கரையோரம் நின்று தினமும் வியாபாரம் மேற்கொள்வதால் மீன் கழிவுகளை ஏரியின் ஓரம் விசிசெல்கின்றனர் இதனால் மிகுந்த துர்நாற்றம் வீசி வருகின்றது அப்பகுதியை கடக்கும் பொது மக்கள் முகசுழிப்போடு முக்கை போற்றிகொண்டு பயணித்து வருகின்றனர்
எனவே துறை சார்ந்த அதிகாரிகள் இதன் மீது கவனம் கூர்ந்து ஏரியில் நீர் வரத்தை அதிகப்படுத்தவும் கரையோரங்களில் மீன் கழிவுகளை கொட்டி வரும் வியாபாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் மேலும் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படும் நீரில் கழிவு நீர் கலப்பதால் விவசாயம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்

No comments:
Post a Comment