விருத்தாசலம் அடுத்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்க கோரி பொதுமக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 15 June 2022

விருத்தாசலம் அடுத்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்க கோரி பொதுமக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

விருத்தாசலம் அடுத்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்க கோரி  பொதுமக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் வட்டம், காரமாங்குடி கிராமத்தில் மாவட்ட கனிம அறக்கட்டளை சார்பில்   80 லட்சம் ரூபாயில் புதியதாக கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிமுடிக்கப்பட்டு 6மாதம் ஆன நிலையில் கடந்த மே மாதம் தமிழக முதல்வர் காணொலி மூலம் திறப்பதாக நாளிதழில் செய்திகள் வெளியானதையாடுத்து அந்த காரணம் ஏதுமின்றி திடீரென நிகழ்ச்சி தடைபட்டது. 

கார்மாங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை உடனடியாக திறப்பதால் கார்மாங்குடி, வல்லியம், கீரனூர், மேலப்பாளையுர், மருங்கூர், காவனூர், பவழங்குடி, தேவங்குடி, கொடுமனூர், சக்கரமங்களம் உள்ளிட்ட பகுதி வசிக்கும் சிறுவர்கள் முதியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் பயன்பெறும் வகையில் உடனடியாக திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சமூக ஆர்வலர் ஆனந்தமாலை தலைமையில் நடைபெற்றது. சதீஷ் வரவேற்பு ஆற்றினார் பழனிவேல் செந்தில் முன்னிலை வகித்தனர் நிகழ்ச்சியின் முடிவில் பாண்டியன் நன்றியுரை கூறினார்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை திறப்பதில் அரசியல்வாதிகளின் உள்நோக்கம் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

No comments:

Post a Comment

*/