கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம் சோழத்தரம் அருகே பாளையங்கோட்டை வடக்குபாளையம் கிராமத்தில் தூய இருதய மேல்நிலைப்பள்ளி உள்ளது இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள் இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர் அப்போது திடீரென பறந்து வந்த விஷ வண்டுகள் அந்த மாணவ மாணவிகளை விரட்டி விரட்டி கடித்தது இதில் வலி தாங்க முடியாமல் மாணவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார் மேலும் ஒரு சில மாணவர்கள் வலி தாங்க முடியாமல் மயக்கம் போட்டு கீழே விழுந்தனர்.
வண்டுகள் கடித்து 40க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் காயமடைந்தனர் இதையடுத்து இச்செய்தி காட்டுத்தீ போல் பரவியது உடனடியாகவே மாணவ மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கூடத்துக்கு வந்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர் பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
மேலும் இது சம்பந்தமாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில் கடந்த இரு வாரங்களாக தமிழக அரசு பள்ளி கல்வித்துறை கல்வி நிலையங்களையும் சுத்தமாக வைத்திருக்கவேண்டும் பள்ளி திறப்பதற்கு முன் தூய்மைப்படுத்த வேண்டும் என கூறியும் பள்ளி நிர்வாகம் அரசு அதிகாரிகளும் அலட்சியமாக இருந்ததால் இந்த விபத்து நடந்துள்ளது என தெரிவித்தனர்.
மேலும் இப்பகுதி கடைக்கோடி பகுதியாக இருப்பதால் அரசு அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை மேலும் இங்கு இருக்கிற அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகளை ஆய்வு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்தியாளர் கே பாலமுருகன்


No comments:
Post a Comment