கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுக்கா வேப்பூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கழுதூர் சிறுகரம்பலூர் சாலையில் ஜீன் 14.தேதிந் தேதி மதியம் மூன்று மணியளவில்டி, எண், 91 வி, 5647 என்ற எண்ணுள்ள இரு சக்கர வாகனத்தை பாசார் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி மகன் முத்து- வயது 50என்பவர் ஓட்டிக் கொண்டு சென்றார் வண்டியில் அவருக்கு பின்னால் பாசார் கிராமத்தை சேர்ந்த. சொக்கபிள்ளை மகன் வெங்கடேசன்- வயது 47 என்பவர் உட்கார்ந்து கொண்டு செல்லும் போது அவர்களுக்கு எதிர் திசையில் வந்த டி,எண், 91 யூ, 6297. என்ற பதிவெண் கொண்ட ஆட்டோவை ஓட்டி வந்த வேப்பூர் தாலுக்கா சிறுபாக்கம் கிராமத்தை சேர்ந்த மூக்கன் மகன் முருகன் என்பவர் ஓட்டி வந்த ஆட்டோ, முத்து ஓட்டி சென்ற பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது .
இதில் இரு சக்கரவாகனத்தை ஒட்டி வந்த பாசார் முத்து என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார், பின்னால் உட்கார்ந்து சென்ற வெங்கடேசனுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
அக்கம் பக்கம்சென்றவர்கள் காயம் பட்ட வெங்கடேசனை மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைகாக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டார்.
இறந்த முத்துவின் உடலை பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டது, இந்த விபத்து தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.

No comments:
Post a Comment