கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பில் தமிழ்நாடு திருநீலகண்டர் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்க அலுவலகத்தை புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் ஆ.அருண்மொழிதேவன் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
இவ்விழாவில் எம்.ஆர்.கே கூட்டுறவு சங்கத்தலைவர் பாலசுந்தரம், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் உமாமகேஸ்வரன், மாவட்ட மாணவரணி தலைவர் வீரமூர்த்தி, நகர செயலாளர் மணிகண்டன், மாவட்ட பிரதிநிதி சிவஞானம், முன்னாள் அவைத் தலைவர் சர்புதீன், தமிழ்நாடு திருநீலகண்டர் தொழிற் சங்க மாநில தலைவர் சிவ. சந்தானம், மாநில பொதுச் செயலாளர் ஏ.கே.ராஜா, மகளிர் அணி தலைவி ரேவதி, மாவட்ட துணை தலைவர் சின்னதம்பி, மாவட்ட துணை செயலாளர் பிரதாப்சிங்,நிர்வாக குழு உறுப்பினர்கள் மீனாம்பிகா,சசிகலா, பல்வேறு தொழிற்ச் சங்கங்களின் பிரதிநிதிகள் சுசீலா, குணவதி, செல்வா மருத்துவமனை டாக்டர் பிரகதீஸ்வரன், கிரீடு தொண்டு நிறுவனத்தின் தலைவர் முனைவர் நடனசபாபதி, பல்வேறு தொழிலாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். முடிவில் ராஜசுலோச்சனா அனைவருக்கும் நன்றி கூறினார்.

No comments:
Post a Comment