கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த மாளிகைமேடு கிராமத்தில் பவ்டா மகளிர் சுய உதவிக்குழு மற்றும் டாக்டர் அம்பேத்கர் இரவு பாடசாலை இணைந்து பவ்டா விடுமுறை பள்ளி விழா நடத்தியது.
ஜூன் 9 மாளிகைமேடு கிராமத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் விழுப்புரம் பவ்டா நிதி நிறுவன மேலாண்மை இயக்குனர் டாக்டர் ஜாஸ்ஸின் தம்பி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வின் தொடக்கமாக மாளிகைமேடு அம்பேத் அவர்கள் வரவேற்புரையாற்றி அனைவரையும் வரவேற்றார். மொழியாடல் கலைக்குழுவின் சார்பாக மக்கள் இசை அடித்து சிறப்பு விருந்தினர்கள் உட்பட அனைவரையும் வரவேற்றனர்.
ராசாபாளையம் கிளை முன் களப்பணியாளர் நந்தினி அவர்களின் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில் விழுப்புரம் பவ்டா நிதி நிறுவனம் பொது மேலாளர் சாந்தாராம் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்வின் சிறப்பு அழைப்பாளர்களாக கடலூர் மண்டல உதவி பொது மேலாளர் டாக்டர் சிவா, திரு வித்யாதரன், ராசபாளையம் கிளை முதுநிலை மேலாளர் திரு சசிகுமார்,
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் திரு. தாமரைக்கண்ணன், கிழக்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் திரு. கண்ணன், மாவட்ட பொருளாளர் திரு.செந்தில்,
மாளிகைமேடு திமுக கிளை கழக முன்னணி நிர்வாகிகள் ராஜன், செல்வமணி, போன்றோர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
கலை நிகழ்ச்சிகள் செய்த மாணவ மாணவிகள் அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
விழாவின் இறுதி நிகழ்ச்சியாக சிறப்பு விருந்தினர்களை சிறப்பாக வரவேற்ற மொழியாடல் கலைக்குழு மற்றும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்த ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு நன்றி தெரிவித்து ஜெய்பீம் அவர்கள் நன்றியுரையாற்றி நிறைவு செய்தார்.
இதில் ஏராளமான மாளிகைமேடு ஊர் பொதுமக்கள் மற்றும் பவ்டா சுய உதவிக் குழு உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:
Post a Comment