வேப்பூர் கூட்டுரோடு அருகே நள்ளிரவில் புளியமரம் திடீரென்று சாலையில் சாய்ந்தது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 3 June 2022

வேப்பூர் கூட்டுரோடு அருகே நள்ளிரவில் புளியமரம் திடீரென்று சாலையில் சாய்ந்தது.

வேப்பூர் கூட்டுரோடு அருகே நள்ளிரவில் புளியமரம் திடீரென்று  சாலையில் சாய்ந்தது.


கடலூர் மாவட்டம், வேப்பூர் கூட்டுரோடு அருகே காட்டுமைலூர் செல்லும் இணைப்பு சாலையில் பழமை வாய்ந்த புளியமரம் இருந்து வந்தது, கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரங்களில் பலமான காற்றும்  வீசி வந்தது.


இந்நிலையில் ஜீன் 2- ந் தேதி நள்ளிரவு 12-45 மணியளவில் திடீரென்று புளியமரம் சாலை ஓரம் தானாக  சாய்ந்தது, இதனால் விருத்தாசலம் சேலம் தேசிய நெடுஞ்சாலை 532ல்  போக்குவரத்து பாதிக்கபடும் சூழ்நிலை ஏற்பட்டதால் தகவலறிந்து வந்த வேப்பூர் போலிசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக மரத்தை துண்டாடி அப்புறபடுத்தினார்கள்


இதனால்  போக்குவரத்து பாதிக்கபடவில்லை இதை கண்ட வாகன ஓட்டிகள் கடமை உணர்வுடன் நள்ளிரவில் பணியாற்றிய போலிசாரையும், வேப்பூர்  தீயணைக்கும் வீரர்களையும் பாராட்டினார்கள்.

No comments:

Post a Comment

*/