ஊராட்சி மன்ற தலைவரின் கார் கண்ணாடியை உடைத்து - 1.57 லட்சம் ரூபாய் திருட்டு, போலிசார் விசாரணை - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 3 June 2022

ஊராட்சி மன்ற தலைவரின் கார் கண்ணாடியை உடைத்து - 1.57 லட்சம் ரூபாய் திருட்டு, போலிசார் விசாரணை

கழுதூர் ஊராட்சி மன்ற தலைவரின் கார் கண்ணாடியை உடைத்து - 1.57 லட்சம் ரூபாய் திருட்டு, போலிசார் விசாரணை 


கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுக்கா வேப்பூர் அடுத்த அரியநாச்சி கிராமத்தை சேர்ந்தவர் கணபதி மகன் கருணாநிதி (வயது43) , இவர் கழுதூர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.


இந்நிலையில் ஜீன் 2 ந் தேதி மதியம் அரியநாச்சியிலிருந்து வேப்பூர் கூட்டுரோடு அருகிலுள்ள தேசிய வங்கியில் பணம் செலுத்த. டிஎண்,01,ஏ கியூ, 9799 என்ற எண்ணுள்ள தனது இன்டிகா காரில் 1.57லட்சம் பணத்தோடு சென்றுள்ளார்


 அங்கு வங்கியில் பணம் செலுத்த முடியாத சூழலில் அங்கிருந்து தனது காரில் கழுதூர் கிராமத்தில் சென்னை திருச்சி சர்விஸ் சாலையில் உள்ள மத்திய அரசு வங்கிக்கு பணம் செலுத்த சென்றுள்ளார்.


அப்போது கழுதூர் மத்திய அரசு வங்கி முன் காரை நிறுத்திவிட்டு வங்கிக்குள் சென்று கருணாநிதி வெளியே வந்து பார்த்த போது காரின் முன்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு டேஷ் போர்டில் வைத்திருந்த 1.57 லட்சம் ரூபாய் பணம் திருடு போனது தெரியவந்தது.


இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேப்பூர் போலீசார் காரின் கண்ணாடியை உடைத்து டேஸ் போர்டில் இருந்த பணத்தை திருடி சென்ற மர்ம நபர் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

*/