நேரு யுவ கேந்திராவின் சார்பில் உலக மிதிவண்டி தினம் மற்றும் பேரணி.
இந்திய அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறையின் கடலூர் மாவட்ட நேரு யுவ கேந்திராவும் மற்றும் கடலூர் ரைடர்ஸ் கம்யூனிட்டியும் இணைந்து உலக மிதிவண்டி தினத்தை முன்னிட்டு பேரணியை நடத்தியது.
இந்நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் திரு. பி .சிவா அவர்கள் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.நேரு யுவ கேந்திராவின் மாவட்ட இளைஞர் அலுவலர் திரு.ஆர்.ரிஜேஷ் குமார் அவர்கள் தலைமை தாங்கினார்.
கடலூர் ரைடர்ஷ் கம்யூனிட்டி சார்பில் 20 இளைஞர்கள் மிதிவண்டி தின பேரணியில் மிதிவண்டியுடன் கலந்துகொண்டனர்.
இப்பேரணியானது அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கில் இருந்து புறப்பட்டு, தேவனாம்பட்டிணம் வெள்ளி கடற்கரை வரை சென்று திரும்ப அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கம் வந்து அடைந்தனர்.
நேரு யுவ கேந்திராவின் கடலூர் ஒன்றிய தேசிய இளையோர் தொண்டர் ஜெயராஜ்,கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜெயதேவி இளையோர் நலச்சங்கத்தின் தலைவர் தீபங்கர் செய்திருந்தார்.

No comments:
Post a Comment