அருள்மிகு ஸ்ரீ விநாயகர், முருகர், கருப்பசாமி, சாம்பான், சாந்தாயி, உள்ளிட்ட தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம்.. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 17 June 2022

அருள்மிகு ஸ்ரீ விநாயகர், முருகர், கருப்பசாமி, சாம்பான், சாந்தாயி, உள்ளிட்ட தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம்..

அருள்மிகு ஸ்ரீ சாம்பான் அருள்மிகு ஸ்ரீ சாந்தாயி  ஆலய கும்பாபிஷேகம், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த  படுகளாநத்தம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விநாயகர், முருகர், கருப்பசாமி,  சாம்பான், சாந்தாயி,  உள்ளிட்ட தெய்வங்களுக்கு அஷ்டப்பந்தன மகாகும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.


முன்னதாக புனித நீர் கலசங்களை யாகசாலையில் வைத்து அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, ராக்ஷப்பந்தனம் உள்ளிட்ட முதற்கால பூஜையும், மறுநாள் காலை 7மணிக்கு இரண்டாம் கால பூஜையும், 8.30மணியளவில் பூர்ணாஹதி, யாத்ரா தானம் உள்ளிட்ட யாகங்கள் வளர்க்கப்பட்டு, சிறப்பு வேள்வி பூஜைகள் செய்யப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் படிக்க மேலதாலங்களுடன் மங்கள இசை முழங்க கோபுர விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

No comments:

Post a Comment

*/