மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் (DISHA) மாவட்ட ஆட்சித்தலைவர் கி. பாலசுப்பரமணியம், முன்னிலையில் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் திரு. தொல். ரதிருமாவளவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் (DISHA) மாவட்ட ஆட்சித் தலைவர் கி. பாலசுப்பரமணியம் முன்னிலையில் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் திரு. தொல். திருமாவளவன் அவர்கள் தலைமையில் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் மா.செ. சிந்தனைச்செல்வன் அவர்கள் பங்கேற்புடன் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
மத்திய அரசின் திட்டங்களை வெற்றிகரமாக மற்றும் சரியான நேரத்தில் செயல்படுத்த மத்திய/ மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து அனைத்து நிலைகளிலும் மக்கள் பிரதிநியின் பங்களிப்பை உறுதி செய்வதற்கும், மத்திய அரசின் பல்வேறு திட்டங்களில் செலவிடப்படும் நிதி குறித்து கண்காணிப்பதற்காக மாவட்ட அளவில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் விற்பனைக் குழு, பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருத்துவத்துறை, முதன்மை கல்வி அலுவலகம், சமூக பாதுகாப்பு திட்டம், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, நிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறை, கடலூர் மாநகராட்சி, பண்ருட்டி, நெல்லிக்குப்பம், விருத்தாசலம், வடலூர் மற்றும் திட்டக்குடி நகராட்சி, பேரூராட்சிகள் அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மகளிர் திட்ட அலுவலகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மாவட்ட கனி மவளத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு), சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை, அஞ்சல் அலுவலகம், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மாவட்ட தொழில் மையம், தகவல் தொழில்நுட்பத்துறை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, பொதுப் பணித்துறை, நீர்வளத் துறை விருத்தாசலம் மற்றும் சிதம்பரம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆகிய துறைகளில் மத்திய அரசு மூலம் செயல்படுத்தப்படும் 41 திட்டங்கள் குறித்து தொடர்புடைய துறைகளில் செயல்படுத்தப்படும் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து எதிர்வரும் ஆய்வுக்கூட்டத்தின்போது மக்கள் பிரதிநிதிகள் அவர்களுடைய தொகுதியில் தேவைப்படும் பணிகளின் விவரங்கள் குறித்தும், மேற்படி துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் பணிகளில் உள்ள முன்னேற்றம் குறித்தும் உரிய தரவுகளுடன் கலந்து கொள்ள வேண்டுமெனவும், திட்டங்களின் செயல்பாடு முன்னேற்றம், குறைபாடுகள் ஆகியவை குறித்த தங்களது கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டுமெனவும் மாண்புமிகு சிதம்பரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் / DISHA குழு இணைத்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.சக்திகணேசன், , கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) / திட்ட இயக்குநர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர், , கடலூர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


No comments:
Post a Comment