வடலூர் வாரச் சந்தையில் போக்குவரத்திற்கு ஏதுவாக நடவடிக்கை மேற்கொண்ட வடலூர் காவல்துறையினர். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 18 June 2022

வடலூர் வாரச் சந்தையில் போக்குவரத்திற்கு ஏதுவாக நடவடிக்கை மேற்கொண்ட வடலூர் காவல்துறையினர்.

வடலூர் வாரச் சந்தையில் போக்குவரத்திற்கு ஏதுவாக நடவடிக்கை மேற்கொண்ட வடலூர் காவல்துறையினர்.


கடலூர் மாவட்டம் வடலூரில் சனிக்கிழமைகள் தோறும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த  விவசாயிகள் பலர் தங்கள் விளை பொருட்களை சந்தையில் விற்பனைக்கு எடுத்து வரும் நிலையில் வடலூர் வாரச்சந்தையில் சாலைகளில் இருபுறமும் சமீபகாலமாக கடைகள் ரோட்டை ஆக்கிரமிக்கும் விதமாக அமைக்கப்பட்டிருந்தன.

 

 பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பாக பல புகார்கள் எழுந்து வந்த நிலையில் துரித நடவடிக்கை மேற்கொண்ட வடலூர் காவல்துறையினர் ரோட்டோரம் உள்ள கடைகளை அகற்றி பேரிகார்டு அமைத்து போக்குவரத்துக்கு இடையூறு இன்றி சரி செய்து உள்ளனர்  இச்செயல் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது பெரும் விபத்து ஏற்படும் முன் பொதுமக்களின் நலன் கருதி துரித நடவடிக்கை மேற்கொண்ட வடலூர் காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

*/