வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் இணைய வழி கல்வி வாணொலி முதலாம் கல்வி ஆண்டு நிறைவு விழா - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 18 June 2022

வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் இணைய வழி கல்வி வாணொலி முதலாம் கல்வி ஆண்டு நிறைவு விழா

வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் இணைய வழி கல்வி வாணொலி முதலாம் கல்வி ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது.



கடலூர் மாவட்டம், வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளியில் கடலூர் மாவட்ட இணைய வழி கல்வி வானொலியின் முதலாம் கல்வி ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. விழாவில்  சிறப்பு விருந்தினராக கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரா.பூபதி அவர்கள் கலந்து கொண்டார்.


புவனகிரி வட்டம் கத்தாழை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் ஆசிரியரும் இணையவழி கல்வி வானொலியின் ஒருங்கிணைப்பாளருமான ஆ.கார்த்திக் ராஜா அவர்கள் வரவேற்புரை வழங்கினார் பள்ளிகல்வித் துறையின் இணை இயக்குனர் வெ. ஜெயக்குமார் அவர்கள் இணைய வழியில் காணொளி வாயிலாக வாழ்த்துறை வழங்கினார் நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரா.பூபதி அவர்கள் கலாமை தலைமையுரையாற்றினார்.


சிறப்புரையை  வடலூர் மாவட்ட கல்வி அலுவலர் சி.ப.கார்த்திகேயன் அவர்கள் வழங்கினார்.விழாவில் இணைய வழி கல்வி வானொலியின் ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் ராஜா கூறுகையில் தமிழகத்தில் மொத்தம் 170 அரசு பள்ளி ஆசிரியர்கள் இணைய வழி கல்வி வானொலியில் தன்னார்வலர்களாக தங்களை இணைத்துக்கொண்டு அனைவரின் கூட்டு முயற்சியால் கட்டணமில்லா சிறப்பான சேவையாற்றி வருகின்றனர். மாணவர்களுக்கு கொரோனா காலகட்டத்தில் வீட்டிலிருந்தபடியே கல்வி கற்க மிகவும் இந்த இணைய வழி கல்வி காணொளி பயனுள்ளதாக அமைந்தது இதனை தமிழகம் முழுவதும் 40000 நேரத்திற்கு மேல் மாணவர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் கடலூர் மாவட்டத்தில் மட்டும் 36 பள்ளிகளில் 40 ஆசிரியர்களை கொண்டு கட்டணமின்றி விளம்பரமின்றி செயல்படுத்தப்பட்டு வருகின்றது என தெரிவித்தார். விழாவில் ஆன்லைன் கல்வி ரேடியோ சிறப்பு மலர் வெளியிடப்பட்டது QR code ஏன் தொழில்நுட்பம் கொண்ட சிறப்பு பயிற்சி ஏடு வழங்கப்பட்டது. ஆசிரியர்களுக்கு மாணவர்களுக்கு சான்றிதழ்கள், கேடயங்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.


அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் கோ.கலா மற்றும் வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் இரா.செல்வராஜ் கல் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சி நிறைவில் நன்றியுரையை விழா ஒருங்கிணைப்பாளர் தங்களி குப்பம் ஊராட்சி தொடக்கப்பள்ளி ஆசிரியை இ.ராஜலட்சுமி வழங்கினார் விழாவில் கடலூர் மாவட்டதை சேர்ந்த குறிஞ்சிப்பாடி, புவனகிரி, பண்ருட்டி வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் கடலூர் மாவட்ட பல்வேறு வட்டார ஆசிரியர் பயிற்றுநர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/