வடலூர் அடுத்த கருங்குழியில் வருவாய் தீர்வாய நிறைவு விழா மற்றும் அரசு நலத்திட்டங்கள் வழங்கும் விழா - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 18 June 2022

வடலூர் அடுத்த கருங்குழியில் வருவாய் தீர்வாய நிறைவு விழா மற்றும் அரசு நலத்திட்டங்கள் வழங்கும் விழா


வடலூர் அடுத்த கருங்குழியில் வருவாய் தீர்வாய நிறைவு விழா மற்றும் அரசு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.


கடலூர் மாவட்டம், வடலூர் அடுத்த கருங்குழி கிராமத்தில் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் கடலூர் மாவட்ட வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வருவாய் தீர்வாய நிறைவு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது விழாவில் கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் அவர்கள் வந்து கொண்டு ஜமாபந்தி குறித்தும் அதன் மீது வழங்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விளக்கங்களை பொது மக்களுக்கு எடுத்துரைத்தார்.


கடலூர் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு அவர்கள் வரவேற்புரை வழங்கினார் மேலும் புவனகிரி குறிஞ்சிப்பாடி சிதம்பரம் வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பணி ஆணை மற்றும் குடும்ப அட்டை ஆகியவற்றை வேளாண் மற்றும் உழவர் அத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.


நிகழ்ச்சியில் அவர் பேசுகையில் கருங்குழி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனைத்து வீடுகளுக்கும் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளதாகவும் வட்டார வளர்ச்சி துறை சார்பில் துறை சார்ந்த அரசு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார் நிகழ்ச்சியில் வடலூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டது குறிஞ்சிப்பாடி ஓன்றிய செயலாளர் பொறியாளர் சிவகுமார் அவர்கள் குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் சுரேஷ்குமார் துணை வட்டாட்சியர் சந்திரசேகர் மற்றும் குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ் குமார் மற்றும் பலர் அரசுத்துறை அலுவலர்கள் ஊராட்சி செயலாளர்கள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

*/