வடலூர் பிரபல ரவுடிக்கு அரிவாள் வெட்டு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 30 June 2022

வடலூர் பிரபல ரவுடிக்கு அரிவாள் வெட்டு

வடலூர் பிரபல ரவுடி அருள்பாண்டியன் 3 மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டப்பட்டு பலத்த காயங்களுடன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை 

கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் மகன் அருள்பாண்டியன் வயது ( 34 ) இவர் மீது வடலூர் காவல் நிலையத்தில் ஒரு குண்டாஸ் வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.


அருள் பாண்டியன் தற்பொழுது விருத்தாச்சலம் பகுதியில் வசித்து வருவதாக தகவல் வந்துள்ளன இன்று மதியம் வடலூர் பகுதிக்கு வந்துள்ளார் மாலை 7:30 மணி அளவில் வடலூர் ரயில்வே கேட் அருகே உள்ள டாஸ்மாக் ஒயின் ஷாப்பில் மது அருந்தி கொண்டிருந்த பொழுது 3 மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டப்பட்டு உள்ளார். முன் விரோத காரணமாக வெட்டப்பட்டு உள்ளாரா என்று டிஎஸ்பி ராஜேந்திரன் தலைமையில் வடலூர் போலீசார்ர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பையும் பொதுமக்களிடையே அட்சயத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

*/