கொள்ளிடம் ஆற்றில் குறுக்கே முகத்துவாரத்தில் தடுப்பணை கட்ட வலியுறுத்தல்
சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவருவதால் கொள்ளிடம் ஆற்றின் இரு கரையில் உள்ள கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
கொள்ளிடம் ஆற்றில் உப்பு நீரால் பாதிக்கப்படும் கிராமங்கள் கடலூர் மாவட்டம் உட்பட்ட கிராமங்கள் வல்லம்படுகை,தீத்துகுடி,வடக்குமாங்குடி, தெற்க்குமாங்குடி, நளன்புத்தூர், கருப்பூர், முள்ளங்குடி, ஒட்டரபாளையம், பருத்திகுடி,வெள்ளூர், வேளகுடி, பழையநெல்லூர், அகரநெல்லூர், கண்டியாமேடு, கத்தரிமேடு, திட்டுகாட்டூர், கீழகுண்டலாபாடி, மேலகுண்டலாபாடி, பெராம்பட்டு, மடத்தான்தோப்பு, ஜெயங்கொண்டபட்டினம்பெரியகாரமேடு திட்டுபடுகை , வீரன்கோவில்திட்டு,,
மயிலாடுதுறை மாவட்டம் உட்பட்ட கிராமங்கள் கொள்ளிடம் , சந்தப்படுகை,மாங்கணம்பட்டு, அணும்மந்தபுரம்,முதலைமேடு, ஆரப்பள்ளம் , நாதல்படுகை, நானல்படுகை, அலகுடி, மகேந்திரபள்ளி, ஆச்சால்புரம், நெல்லூர், தண்டச்சிநெல்லூர், சரசுவிலாகம், கொண்ணங்காட்டுபடுகை,மேற்கண்ட கிராமங்களில் கடல் நீர் உட்புகுவதை தடுக்க மற்றும் மழைக்காலங்களில் தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க கொள்ளிடம் ஆற்றின் முகத்துவாரத்திற்கு முன்பு கடைமடை பகுதியில் தடுப்பணை கட்டி விவசாயிகளின் வாழ்க்கை காப்பாற்றபட வேண்டும்.
சென்ற அதிமுக ஆட்சியில் பலமுறை தடுப்பணை கட்ட ஆய்வுகள் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆனால் தடுப்பணை கட்டப்படவில்லை.
தற்போது முகத்துவாரத்தில் தடுப்பு அணை கட்டினால் உப்புநீர் உட்புகுவது தடுக்கப்பட்டு இதனை சுற்றியுள்ள விவசாயிகள் பொதுமக்கள் நல்ல பயன்படுத்த முடியும் நிலத்தடி நீரில் உப்பு நீர் கலப்பதை தடுக்கப்படும் இதனால் இந்த இரு மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்ட கிராம பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:
Post a Comment