தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியின் சார்பாக கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நாவலூர் கிராம ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தியும். ஏரியில் அரசு திட்டங்களை செயல்படுத்துவது தடுக்க வலியுறுத்தியும். மாபெரும் குடிசை போடும் போராட்டம் நாவலூர் ஏரி சர்வே எண் 54/1 ல் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியின் மகளிரணி நிர்வாகி மு.தனக்கோடி தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியின் மாநில துணைச் செயலாளர் கலந்து கொண்டு.
இந்நிகழ்வில் கட்சியின் கலை இலக்கியப் பேரவை மாவட்ட செயலாளர் முருகேசன், மற்றும் கிளை நிர்வாகிகள் கோடீஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி, தனக்கொடி, எழிலரசி ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment