நேற்று 03.06.2022ம் தேதி காலை 08.30 மணியளவில் ஆத்திரிகுப்பத்தை சேர்ந்த முருகவேல் மனைவி அஞ்சுலட்சுமி வயது 50 என்பவர் முத்தாண்டிக்குப்பம் கடைவீதியில் காரிலிருந்து இறங்கி கடைக்கு சென்றபோது இடுப்பில் சொருகி வைத்திருந்த 3 பவுன் தங்க செயின் ரூபாய் 2500 பணத்துடன் கூடிய மணிபர்சை தவற விட்டுவிட்டார். இது தொடர்பாக அஞ்சுலட்சுமி முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில் முத்தாண்டிக்குப்பம் உதவி ஆய்வாளர் ராஜாராம், சிறப்பு உதவி ஆய்வாளர் அருள், தனிபிரிவு தலைமை காவலர் அன்பழகன் ஆகியோர் துரிதமாக செயல்பட்டு காவல் நிலையத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர் ஆய்வில் ஒருநபர் கீழே கிடந்த மணிபர்சை எடுத்தது சி.சி.டி.வி கேமிராவில் பதிவாகிருந்தது, பதிவான காட்சியை கடைவீதிகளில் விசாரணை செய்ததில் பேர்பெரியான்குப்பம் வடக்குதெருவை சேர்ந்த முருகன் வயது 52, என்பவர் என அடையாளம் தெரிந்து, உடனடியாக காவல்துறையினர் முருகன் என்பவரை கண்டுபிடித்து.
அவரிடம் விசாரித்தபோது தான் எடுத்து வைத்ததை ஒப்புக்கொண்டு நகை மற்றும் பணத்துடன் கூடிய பர்சை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. மூதாட்டி தவறவிட்ட 3 பவுன் நகை, பணம் கண்காணிப்பு கேமரா மூலம் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைப்படைத்த போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் அவர்கள் பாராட்டினார்.
No comments:
Post a Comment