கடலூர் மாவட்டம் அண்ணாமலை நகர் சிறப்புநிலை பேரூராட்சியில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து அண்ணாமலைநகர் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் 10 வார்டுகளில் புதிய கொடிக்கம்பம் ஏற்றிவைத்து 5 வார்டுகளில் சுமார் ஆயிரம் நபர்களுக்கு அன்னதானம் அண்ணாமலை பேரூராட்சி மன்ற தலைவர் பழனி தலைமையில் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அண்ணாமலை நகர் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சியில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு புதிய உடைகளை இனிப்புகளையும் பேரூராட்சி மன்ற தலைவர் பழனி வழங்கினார் இந்நிகழ்ச்சியில் உடன் பேரூராட்சி செயலாளர் பாலமுருகன் உடனிருந்தார் மற்றும் துணைத்தலைவர் தமிழ்ச்செல்வி மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் அன்பரசு மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment