கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் வட்டம் வீரானநல்லூர் ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வீரானநல்லூர் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் ஊராட்சி முழுவதும் உள்ள சாலைகள் தெருக்களில் 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஊராட்சிமன்ற தலைவர் அரச பாண்டியன் தலைமை தாங்கினார் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலகிருஷ்ணன் மற்றும் வேளாண்மை அலுவலர் ரமேஷ் ஊராட்சி மன்ற துணை தலைவர் முருகையன் மன்ற உறுப்பினர்கள் ஆனந்தி கொளஞ்சிநாதன் சுந்தரவல்லி சக்திதாசன் மற்றும் பள்ளி தலைமையாசிரியர் கார்த்திகேயன் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் மகளிர் சுய உதவிக்குழுவினர் இளைஞர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் தொடர்ந்து ஊராட்சியில் பதவியேற்று நான்காவது முறையாக மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் தற்போது செழிப்புடன் இருக்கிறதுசெய்தியாளர்: கே பாலமுருகன்
No comments:
Post a Comment