கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கீழ் அருங்குணம் குச்சிபாளையம் கெடிலம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. தற்போது கோடை மழை பெய்ததால் இந்த தடுப்பணையில் ஓரளவு தண்ணீர் உள்ளது. எனவே இந்த தடுப்பணையில் அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள், சிறுமிகள் குளிப்பது வழக்கம்.
அதன்படி காலை அதே பகுதியை சேர்ந்த பெண் பிரியா, மாணவிகள் மோனிஷா, சங்கவி, சுமுதா, காவியா, பிரியதர்ஷிணி, நவி ஆகியோர் தடுப்பணையில் குளிக்க சென்றனர். அப்போது அவர்கள் எதிர்பாராவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றனர்.இதனால் அவர்கள் தண்ணீரில் மூழ்கினார்கள்.
இதுபற்றி தகவல் அறிந்த வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்,தொழிலாளர் நலன் துறை அமைச்சர் சி.வெ.கணேசன்,சட்டமன்ற உறுப்பினர்கள் சபா.ராஜேந்திரன்,தி.வேல்முருகன் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா உடனடியாக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்து சம்பவம் குறித்து விசாரித்தனர்.
மேலும் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர் பின்னர் இறந்தவர்களின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர் மேலும் அமைச்சர் பன்னீர்செல்வம் தனது சொந்த பணத்தில் இருந்து தலா 25,000 ரூபாய் இறந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்கினார்.
உயிரிழந்தோரில் ஐந்து பேர் குச்சிப்பாளையம் கிராமத்தையும், இருவர் அயன் குறிஞ்சிப்பாடி கிராமத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த துயர சம்பவத்தைக் கேள்வியுற்று, மிகவும் வேதனை அடைந்தேன். உயிரழந்தவர்களைப் பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்விபத்தில் உயிரிழந்த ஏழுபேரின் குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக தலா ஐந்து இலட்சம் ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன் இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அருங்குணம் குச்சிப்பாளையம் பகுதியில் சோகத்தில் மூழ்கியுள்ளது
No comments:
Post a Comment