காட்டுமன்னார்கோயில் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கல்லூரி மாணவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு போலீசார் விசாரணை.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பின்பு விடுதி வளாகத்தில் காட்டுமன்னார்கோயில் மேலத்தெருவை சேர்ந்த ஜீவானந்தம் (வயது 20) தந்தை பெயர் ரமேஷ் என்பவர் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இது சம்பந்தமாக காட்டுமன்னார்கோயில் காவல் நிலைத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இது சம்பந்தமாக காட்டுமன்னார்கோவில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.
காட்டுமன்னார்கோயில் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கல்லூரி படிக்கும் மாணவன் தூக்கு மாட்டிய நிலையில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் கே பாலமுருகன்
No comments:
Post a Comment