சிதம்பரம் நடராஜர் ஆலயம் குறித்த கருத்துக்களை பதிவு செய்ய வேண்டி தமிழ் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் விழிப்புணர்வு..!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 16 June 2022

சிதம்பரம் நடராஜர் ஆலயம் குறித்த கருத்துக்களை பதிவு செய்ய வேண்டி தமிழ் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் விழிப்புணர்வு..!!

சிதம்பரம் நடராஜர் ஆலயம் குறித்த பொதுமக்கள் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டி கடலூரில் தமிழ் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் விழிப்புணர்வு நடைபெற்றது. 


தமிழ் உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர். திருமார்பன் தலைமை தாங்கினார், மக்கள் அதிகாரம் பாலு முன்னிலை வகித்தார், சிறப்பு அழைப்பாளராக பேராசிரியர் இராச குழந்தைவேலனார் கலந்துக்கொண்டார் மற்றும் திராவிட கழகம் தென். சிவகுமார் , கவிஞர் எழில்வேந்தி, மக்கள் அதிகாரம் ரவிச்சந்திரன், நந்தா, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி பால்ராஜ் ,உலகத் திருக்குறள் பொது நல பேரவை வெற்றிச்செல்வன் சன்மார்க்க சங்கம் ராஜதுரை கடலூர் மாநகர பொது நல பேரவை ஒருங்கிணைப்பாளர் எஸ். என். கே ரவி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் விழிப்புணர்வில் பொதுமக்களிடம் சிதம்பரம் நடராஜர் கோவில் குறித்து கருத்து கேட்டு விண்ணப்பபடிவம் பெறப்பட்டது.


பின்னர் தமிழ் உணர்வாளர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் திருமார்பன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது தில்லை நடராஜர் ஆலயம் குறித்த கருத்து வரவேற்கப்படுகிறது என்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது பொதுமக்களின் கவனத்திற்கு அந்த அறிவிப்பு சென்றடைய வேண்டும் என்கிற எண்ணத்தில் தமிழ் உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் இன்று கடலூரில் செயல்பட்டனர் தில்லை நடராஜர் ஆலயம் குறித்து பொதுமக்கள் கருத்தை படிவம் மூலமாக பெற்று இந்து சமய அறநிலையத்துறை வருகின்ற 20 6 2022 21 6 2002 ஆகிய இரண்டு தினங்களில் பொதுமக்களின் கருத்து படிவங்களை ஒப்படைக்க இருக்கிறோம் தீட்சதர்கள் அரசியலமைப்புக்கு விரோதமாக சட்டத்திற்கு விரோதமாக அனைத்துவிதமான அடாவடி முறைகளை அங்கு அரங்கேற்றி வருகின்றனர் யாரும் எங்களை கேள்வி கேட்க முடியாது நாங்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்ற மமதையில் ஆணவத்தோடு அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


இந்து சமய நலத்துறை அதிகாரிகள் அங்கு கணக்கு சரியாக இருக்கின்றதா என்று கேட்டபோது அவர்களுடைய கேள்விகளுக்கு பதிலளிக்காமல் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் அதிகாரிகளை கடமை செய்ய விடாமல் தடுத்து அனுப்பியுள்ளனர் ஆகவே சட்டப்படியான  குற்றமளித்தவர்களாக தீட்சிதர்கள் இருக்கும் போது ஏற்கனவே அவர்கள் பல மீது மோசடிகள் இருக்கிறது பல கொலை கொள்ளை குற்றசாட்டுகள் புகார்கள் முதல்தகவல் அறிக்கை பதியப்பட்டு எந்தவிதமான நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் கிடப்பில் உள்ளது ஆகவே இந்த முறைகேடுகள் குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து அத்தனை நிலுவையில் உள்ள வழக்குகளின் விசாரணைகள் முடிக்க வேண்டும் என்று கூறுகிறோம். 

மேலும் அவர் கூறுகையில்  இன்றைக்கு சிதம்பரத்தில் ஆன்மிக அன்பர்கள் பக்தர்கள் கூட தாக்கப்படுகிறார்கள் முறையான வகையில் எங்களுக்கு அர்ச்சனை செய்ய வில்லை என்றும் வழிபாடு செய்ய அனுமதிக்கவில்லை என்றும் கேள்வி கேட்டதற்காக பெண் என்றும் பார்க்காமல் கன்னத்தில் அடித்திருக்கிறார்கள் இது ஒருமுறை அல்ல இருமுறை நடந்திருக்கிறது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கூட அவர்கள் குற்றவாளிகளாக மாறி விடுகின்றனர் ஆகவே இத்தகைய குற்றவாளிகள் குறித்த பொதுமக்களின்  வேதனையும் தார்மீக கோபத்தையும் நாம் அரசுக்கு தெரிவிக்க வேண்டியது நமது கடமை அந்த வகையில் நாம் அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த செயல்பாடு இன்று கடலூரில் நடந்தது தமிழ் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பொதுமக்களுக்கு நாங்கள் வைத்திருக்கும் கோரிக்கை தங்களது கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும் என்றும் நேரிலோ இணையவழி அஞ்சல் வழியிலோ பதிவு செய்யுங்கள் ஆகவே உங்களுடைய கருத்துக்களை அரசுக்கு பதிவு செய்யுங்கள் என்று பொதுமக்களை கேட்டுக் கொள்கிறோம் என்று இவ்வாறு தெரிவித்தார்.

No comments:

Post a Comment

*/