கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் ஊராட்சி ஒன்றியம் வானமாதேவி கிராமத்தில் 32.50 லட்சத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கால்நடை மருந்தக கட்டிடத்தை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தலைமை ஏற்று திறந்து வைத்தார்கள்.
இவ்விழாவில் கூடுதல் ஆட்சியர் முன்னிலை வைக்கவும் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் மாசி சிந்தனைச்செல்வன் அ வாழ்த்துரை வழங்கவும் மண்டல இணை இயக்குனர் மருத்துவர் கு.குபேந்திரன் திட்ட விளக்க உரையாற்றவும் உதவி இயக்குனர் டாக்டர் மோகன் வரவேற்புரை ஆற்றவும் டாக்டர் பிரியதர்ஷினி நன்றி கூறினார்.
இவ்விழாவில் கால்நடை உதவி மருத்துவர்கள் கால்நடை ஆய்வாளர் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் ஊர்தி ஓட்டுனர்கள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் அரசு அலுவலர்கள் மக்கள் பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


No comments:
Post a Comment