சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திடீர் சாமி தரிசனம் மேற்கொண்டார்.
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் நடராஜர் கோவில் தொடர்ந்து பல ஆண்டுகளாக தீட்சிதர்கள் தரப்பில் இருந்து பல சர்ச்சைகளுக்கு உள்ளாகி வருகிறது, அதனை தொடர்ந்து பொது தீட்சிதர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் அணுகுவதும் தொடர்கதையாக இருந்து வரும் சூழலில் கடந்த 2014 ஆம் ஆண்டு சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் நிர்வகிக்கலாம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
அதன்படி சுமார் எட்டு ஆண்டுகளாக உச்சநீதிமன்றம் தீர்ப்பின்படி தீட்சிதர்களை அனைத்தையும் நிர்வகித்து வருகின்றனர் இந்த சூழ்நிலையில் ஜூன் 7 மற்றும் 8ம் தேதிகளில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் கணக்கு வழக்குகளில் குறித்து ஆய்வு செய்ய உள்ளதாகவும் 2014 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை வரவு செலவு குறித்த ஆவணங்கள் தர வேண்டும் என்று கோரிக்கை இந்து சமய அறநிலைத்துறை தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது சட்டபூர்வமாக கோயிலை அமைத்து செயல்பட்டு வருகிறதா இல்லையா என்று மேற்கொண்டனர், அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் மூலம் கோயில் கணக்குகளை ஆய்வு செய்ய உருவாக்கப்பட்டுள்ள ஆய்வுக் குழுவின் சார்பில் கோவில் செயலாளருக்கு அனுப்பி உள்ள நோட்டீஸ் 2014 ஆம் ஆண்டு முதல் தேதி வரையிலான வரவு செலவு கணக்குகளை தணிக்கை அறிக்கைகள் கோவில் மூலமாக நடைபெற்ற திருப்பணி குறித்த விவரங்களும் அறிந்துகொள்ள தொல்லியல் துறை எழுத்துத் துறை இந்து சமய அறநிலைத்துறை அனுமதி பெற்று விபரங்கள் கோயில் சொந்தமான கட்டங்களில் கட்டளைகளையும் சொந்தமான சொத்துக்களையும் மற்றும் அவற்றிலிருந்து பெறப்படும் வருவாய் இடங்கள் மேற்கொண்ட சொத்துக்களை தற்போது இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதியின் படி அங்கீகரிக்கப்பட சொத்து பதிவேடு பதிவேடு மற்றும் காணிக்கை பதிவேடுகள் கோவிலுக்கு சொந்தமான நகை மற்றும் விலை மதிப்பீடு அறிக்கை கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் அதன் குத்தகைதாரர்கள் விபரங்களை ஆய்வு செய்யும்போது வழங்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த நோட்டீசை சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கோயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள்மத்தியில் கனகசபை எனப்படும் பொன்னம்பலத்தை ஏறி சாமி தரிசனம் செய்ய தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது அதற்கு தீர்வு குடியரசுத் தலைவர் பிரதமர் முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது, அறநிலையத் துறையால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் மேலும் பரபரப்பு கூட்டும் விதமாக இந்து அறநிலையத்துறை சார்பில் கோவில் கணக்குகளை ஆய்வு செய்ய உள்ள சூழலில் திடீரென அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு சிதம்பரம் கோவில் சாமி தரிசனம் செய்தார் தீட்சிதர்களிடம் தனியாக ஆலோசனை செய்தனர் அப்போது நாளை நடைபெறும் இந்து சமய அறநிலைத் துறை அதிகாரி ஆய்வு குறித்து தீட்சதர்கள் எடுத்துரைத்தார்.
அப்போது அதனை சட்டப்படி எதிர்கொள்வதாக தீட்சிதர்கள் தெரிவித்தனர் அனைவரும் அரசின் சட்டதிட்டங்கள் உட்பட்ட என அறிய அமைச்சர்கள் அனைத்து தரப்பினருக்கும் சாதகமாக சுமுகமாக தீர்வு காணப்படும் என தீட்சிதர்களிடம் உறுதியளித்தார் அதனைத் தொடர்ந்து சிதம்பர நடராஜர் கோவில் சாமி தரிசனம் செய்த பின்னர் அப்போது அவர்கள் தங்களின் நிலைப்பாடு குறித்து தெரிவித்தனர், அதனுடைய அரசின் நிலைப்பாடு இந்து சமய அறநிலைத்துறை சட்டங்கள் எடுத்துரைத்து நாங்களும் எடுத்துரைத்துள்ளார் விரைவில் சட்டத்திற்கு உட்பட்டு அனைத்து தரப்பினரும் சாதகமாக சுகமாக தீர்வு ஏற்படும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் திமுக நகர கழக செயலாளர் சிதம்பரம் நகர மன்றத் தலைவருமான கே ஆர் செந்தில்குமார் அறநிலை துறை அமைச்சரை வரவேற்றார் உடன் நகர துணை செயலாளர் பாலசுப்பிரமணியன் நகரமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன் அப்பு சந்திரசேகர் எ.ஆர் சி மணி மற்றும் பலர் உடன் இருந்தனர்
No comments:
Post a Comment