ஏ,சித்தூர் ஆரூரான் சர்க்கரை ஆலை முன்பு, கரும்பு நிலுவைத் தொகை வழங்க கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 19 June 2022

ஏ,சித்தூர் ஆரூரான் சர்க்கரை ஆலை முன்பு, கரும்பு நிலுவைத் தொகை வழங்க கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

ஏ,சித்தூர் ஆரூரான் சர்க்கரை ஆலை முன்பு,  கரும்பு நிலுவைத் தொகை வழங்க கோரி  விவசாயிகள்  காத்திருப்பு போராட்டம். 


கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த ஏ.சித்தூர் திருஆருரான்‌ சர்க்கரை ஆலையில் , 1700 விவசாயிகளுக்கு கரும்பு நிலுவைத் தொகை வழங்க வேண்டியுள்ளது.


அதனை  வழங்க கோரி கரும்பு  விவசாயிகள் பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் சர்க்கரை ஆலை   நிர்வாகம் பாக்கி தொகையை இதுநாள் வரை  வழங்கவில்லை. 


மேலும், நிலுவை தொகையில் 57 சதவீத தொகையை ஓரு வருட காலத்தில்  4 தவணையாக வழங்குவதாக தற்போது சர்க்கரை ஆலையை ஏலம் எடுத்த ஹால்ஸ் நிர்வாகம்  தெரிவித்துள்ளது 


இதனால் அதிருப்தி அடைந்த கரும்பு  விவசாயிகள் கூட்டமைப்பு மாவட்ட நிர்வாகி  தனவேல், பா.ஜ., மாவட்ட நிர்வாகி செந்தில்குமார், நல்லூர் ஒன்றிய‌ விவசாயி சங்க நிர்வாகி அண்ணாதுரை உள்ளிட்ட சுமார்  100க்கும் மேற்பட்டோர், ஜீன் 18- ந் தேதி  நேற்று காலை 10:30 மணியளவில் ஏ.சித்தூர் ஆருரான் சர்க்கரை ஆலை முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தகவலறிந்து வந்த வேப்பூர் தாசில்தார் மோகன், திட்டக்குடி டி.எஸ்.பி., ஆரோக்கியராஜ், வேப்பூர் இன்ஸ்பெக்டர் ராமசந்திரன், எஸ்ஐ, சந்திரா  ஆகியோர் விவசாயிகளிடம் சமரச பேச்சில் ஈடுபட்டனர்.


அப்போது  விவசாயிகளுக்கு முழு நிலுவைத் தொகை வழங்கும் வரை ஆலை இயங்காது என கூறி தாசில்தார்  சீல் வைக்க உத்தரவிட்டார். பின்னர், பகல் 2:30 மணியளவில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்  அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

No comments:

Post a Comment

*/