கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த நல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1987-88ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நல்லூர் தெய்வ வழிபாட்டு சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு, முன்னாள் மாணவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மகேஷ் வரவேற்றார். முத்துசாமி தொகுத்து வழங்கினார்.
பள்ளி முன்னால் மாணவரும் மாவட்ட கவுன்சிலருமான நகர் சக்திவினாயகம், சாமிதுரை, அறிவுடைநம்பி, ஆறுமுகம், செல்வம், பெருமாள், துரைராஜ், முருகேசன், மேமாத்தூர் துணை தலைவர் சுப்ரமணியன் மற்றும் சக மாணவர்கள் சிறப்புரையாற்றினார். ராஜராஜன் நன்றி கூறினார்.
இதில், நல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கு மணி காட்டும் அலராமும், பெண்கள் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கட்டிடம் புதுப்பித்தும் மற்றும் சேதமடைந்த குடிநீர் பைப் லைனை சீரமைத்தனர். மேலும், அரசு பள்ளியில் பணியாற்றிய முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் இன்னாள் ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து பரிசு பொருட்கள் வழங்கினர்கள் முன்னாள் மாணவர்கள் தங்களின் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

No comments:
Post a Comment